காற்று மாசு…! சென்னையில் காற்றின் தரக்குறியீடு…?

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு சற்று குறைந்துள்ளது. நேற்று தலைநகர் டெல்லியை விட அதிக காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காற்றுமாசு சற்று குறைந்து காணப்படுகிறது.

 

மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று வேளச்சேரியில் 256 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு இன்று காலை 238 ஆக குறைந்துள்ளது. காற்றின் தரக் குறியீடு 251 ஆக இருந்த ஆலந்தூர் பகுதியில் இன்று 237 ஆக குறைந்தது.

 

மணலி பகுதியில் 190 ஆக இருந்த காற்றில் தரக்குறியீடு 128 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் தரக்குறியீடு 50 க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அதை சுவாசிக்க ஏற்றதாக கருதப்படுகிறது. தற்போதுவரை தரமற்ற காற்று என்ற நிலையே நீடிக்கிறது.


Leave a Reply