இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி!
பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. அவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு காலை 8 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவரின் நாடி துடிப்பு நின்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தற்போது தேவாவின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரது இல்லம் வருகை தந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





