திருப்பதியில் கருட வாகன தரிசனம்..!
திருப்பதியில் கருட வாகன தரிசனத்திற்காக கொட்டும் மழையில் குடைகளை பிடித்தப்படி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காத்திருந்தனர். நவராத்திரி பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாட்டை காண வியாழன்கிழமை இரவு முதலே ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதி மலையில் உள்ள காலரிகளில் காத்திருக்கிருந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணி அளவில் திருப்பதி மலைப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. ஆனாலும் பக்தர்கள் குடைகளை பிடித்தப்படியும், மழையில் நனைந்தவாறும் அங்கேயே காத்திருந்தனர்.பக்தர்களுக்கு ரெயின் கோட்டுகள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் ஆகியவற்றை வழங்கி அணிந்து கொண்டு கருட சேவைக்காக காத்திருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





