விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த த.வெ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த த.வெ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேட்டூர் அணையில் இருந்து திட்டமிடாமல் தண்ணீர் திறக்கப்பட்டதால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை காப்பாற்ற தவெக அரசு தவறிவிட்டது” என தெரிவித்துள்ளார். “பிரதமர் மோடி சென்னைக்கு வந்தப்போ காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கோரிக்கை கூட வைக்கல. அப்புறம் எப்படி விவசாயிகளை காப்பாத்துவாங்க?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




