--- --:--:-- --

வருகையில்லா ஆவணப்பதிவு அரசாணைக்கு தடைகோரிய மனு!

3

வருகையில்லா ஆவணப்பதிவு அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், மனை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை பதிவுக்கு, ஆன்லைன் மூலம் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறையை அறிமுகம் செய்வது தொடர்பாக ஜூலை 7 ஆம் தேதி தமிழக அரசாணை பிறப்பித்தது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தொடர்புடைய செய்தி அந்த மனுவில், வருகையில்லா ஆவணப் பதிவுக்காக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ள மென்பொருளை முறையாக பரிசோதிக்காமல் அவசர, அவசரமாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

புதிய நடைமுறைப்படி, ஆவணப்பதிவின் போது நேரடி சரிபார்ப்பு மற்றும் விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்படாதது, பத்திரப்பதிவு சட்டப்பிரிவுக்கு எதிரானது. இந்த புதிய நடைமுறை காரணமாக பத்திரப்பதிவின் போது, விருப்பப்பட்டு தான் சொத்துக்களை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை வற்புறுத்தலின்படி விற்கப்படுகிறதா என்பதை கண்டறிய முடியாது.

 

இந்த நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதால், இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக கொண்டு வரப்பட்ட விதிகளை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon