இன்றிரவு கரைகடக்கிறது புல்புல் புயல் – மேற்கு வங்கம், ஒடிசாவில் கனமழை

புல்புல் புயல், இன்றிரவு மேற்கு வங்க மா நிலத்தில் கரைகடக்கிறது. தற்போது அந்த மாநிலத்தில் இதனால், பலத்த மழை பெய்து வருகிறது; விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

வங்கக் கடலில் உருவான ‘புல்புல்’ புயல், தமிழகம், ஆந்திரா பக்கம் திரும்பாமல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகர்ந்தது. இதனால், அந்த இரு மாநிலங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

 

புல்புல் புயலால், மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து, பல இடங்களில் போக்குவரத்து முடங்கி உள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி , கொல்கத்தாவில் இருந்து 185 கிமீ தொலைவில் புல்புல் புயல் மையம் கொண்டிருந்தது. இன்றிரவு 10 மணியளவில், மேற்கு வங்க கடலோர பகுதிகளில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையொட்டி, மேற்கு வங்ககத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 12 மணி நேரம் விமான சேவைகள் நிறுத்தப்படுகிறது.

 

ஒடிசாவின் வடக்கு மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை சமாளிக்க, மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.


Leave a Reply