தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அனைத்து இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில் தமிழக கடல் பகுதியில் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்றும் ஆனால் புல்புல் புயல் காரணமாக ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply