டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? – ஃபட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார். மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதா, சிவசேனா இடையே இழுபறி நீடிக்கிறது. இதனிடையே அமித்ஷாவை அவரது இல்லத்தில் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துள்ளார்.

 

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் எதிர்பாராதவிதமாக பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். மாநிலத்தில் விரைவில் புதிய அரசு அமையும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் பட்னாவிஸ் தெரிவித்தார்.


Leave a Reply