கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு விரிவான முறையில் நடைபெறும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு விரிவான முறையில் நடைபெறும் என மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி ஆய்வு குறித்த ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்றது.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் ஐந்தாவது கட்ட அகழாய்வு சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து ஆறாவது கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார். ஜனவரி மாதம் முதல் அடுத்த கட்ட ஆய்வு நடைபெறும் என்றும் இதன்மூலம் புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.


Leave a Reply