நவம்பர் 10-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் , கட்சியின் சட்டத்திட்டதிருத்தம், தணிக்கை குழு அறிக்கை ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

தேர்தல் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


Leave a Reply