குழந்தை சுர்ஜித் மரணத்துக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பாஜக அரசு திட்டமிட்டு பழிவாங்குவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசின் அலட்சியத்தால் தான் குழந்தை சுர்ஜித் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினார்.
போராட்டத்தை கைவிடாவிட்டால் பணிநீக்கம் செய்து விடுவதாக மருத்துவர்களை அரசு மிரட்டுவதாகவும், போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்றும் கே.எஸ் அழகிரி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




