பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்

பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவையும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் சந்தித்தார். ஹரியானாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையை பெறாத பாஜக, ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது.

 

இதையடுத்து இரண்டாவது முறையாக மனோகர் லால் கட்டார் முதலமைச்சரானார். இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற மனோகர் லால் கட்டார் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்த கட்டார் இரண்டாவது முறையாக ஹரியானா முதலமைச்சர் ஆனதற்கு வாழ்த்து பெற்றார்.


Leave a Reply