மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி மற்றும் 57வது குருபூஜை விழாவை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டக் கோரி தேவர் சிலை முன்பாக 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.