--- --:--:-- --

சுர்ஜித்தின் மரணத்திற்கு முதல்வர் பழனிசாமி பதிலளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

8

குழந்தை சுர்ஜித்தின் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாளேடு ஒன்றில் எழுதப்பட்டுள்ள கேள்விகளை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின் அந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வாரா என வினவியுள்ளார்.

 

குழியில் விழுந்த குழந்தைகளை மீட்பதில் அனுபவமில்லாத தேசிய பேரிடர் மீட்பு படையை அழைத்து நேரத்தை வீணடித்ததாகவும், அதற்கு பதிலாக இராணுவத்தையோ துணை ராணுவத்தையோ அழைக்காதது அரசின் தோல்வி தானே என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த கேள்விகளுக்கான பதிலை தான் மட்டுமல்ல தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். குழந்தை சுர்ஜித் மீட்பு பணியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் இவை அனைத்தும் பொய்யான ஒரே போடாக போட்டு விடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon