--- --:--:-- --

ப.சிதம்பரத்திற்கு நவ.13 வரை நீதிமன்றக் காவல்

4

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையின் காவல் முடிவடைந்த நிலையில் ப சிதம்பரம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை அமலாக்கத்துறை அக்டோபர் 16 ஆம் நாள் கைது செய்து விசாரித்து வந்தது.

 

காவல் முடிந்த நிலையில் சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்தி அமலாக்கத்துறை காவலை மேலும் ஒரு நாள் நீடிக்குமாறு கோரியது. அதை ஏற்க மறுத்த நீதிபதி அஜய்குமார் சிதம்பரத்தை நவம்பர் 13 ஆம் நாள் வரை நீதிமன்ற காவலில் அனுப்ப உத்தரவிட்டார்.

 

மேலும் சிறையில் சிதம்பரத்திற்கு தனிஅறை, மேற்கத்திய கழிவறை போன்ற வசதிகளை அளிக்கவும் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் அனுமதித்தார். முன்னதாக உடல்நலமின்மையால் இடைக்கால பிணை கோரி சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon