குழந்தை சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் : திருச்சி மாவட்ட ஆட்சியர்

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

 

இதனை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சிவராசு, திருச்சி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 28 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய ஆழ்துளைகிணறுகளை மூட இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

 

குழந்தை சுர்ஜித்தின் மீட்பு பணிக்காக செலவழிக்கப்பட்ட பணம் விவரம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என்றும் மீட்பு பணிக்கு 5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Leave a Reply