நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை!
காற்றாலை அமைத்து தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கேரளா நடிகை சரிதா நாயருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேரளா நடிகை சரிதா நாயர் அவரது முன்னாள் கணவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவையில் காற்றாலை அமைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் ரவி என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர்கள் மூவரும் சேர்ந்து காற்றாலை அமைத்து தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது புகார் வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்தது.
அதில் பண மோசடியில் ஈடுபட்ட நடிகை சரிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சரிதாநாயர் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் ரவி என்பவருக்கும் 3 ஆண்டு கால சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




