சுஜித் மரணம்: கடைசி 20 நிமிடங்களில் நடந்தது என்ன?
ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சுர்ஜித்தின் உடல் 20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்ட விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினர் என மொத்தம் 15 பேர் சுர்ஜித்தை வெளிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அரசு மருத்துவர் குழுவும் உடன் இருந்துள்ளது. ஆழ்துளை கிணற்றில் சிக்கியவர்களை வெளிக்கொண்டு வரும் பணியில் அனுபவம் பெற்ற நாமக்கல்லை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் மணப்பாறையை சேர்ந்த ரூபன் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். சுர்ஜித்தின் உடலை வெளியே எடுக்கும் பணி அதிகாலை 3 மணிக்கு தொடங்கி அடுத்த 20 நிமிடங்களில் நிறைவு பெற்றதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் விழுந்ததையடுத்து குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் ஐந்தாம் நாள் மீட்பு பணியின் போது குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து குழந்தை உயிர் இழந்து விட்டதை உணர்ந்து அது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து கல்லறை தோட்டத்தில் குழி தோண்டப்பட்டு அங்கு குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே குழந்தை சுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணறும் அதனருகே மீட்புக்காக தோண்டப்பட்ட கிணறும் உடனடியாக மூடப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




