சுஜித்தின் உடலை காட்டாதது ஏன்? – ராதாகிருஷ்ணன் விளக்கம்

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் விழுந்ததையடுத்து குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

 

இந்த நிலையில் ஐந்தாம் நாள் மீட்பு பணியின் போது குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து குழந்தை உயிர் இழந்து விட்டதை உணர்ந்து அது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

இதையடுத்து கல்லறை தோட்டத்தில் குழி தோண்டப்பட்டு அங்கு குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே குழந்தை சுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணறும் அதனருகே மீட்புக்காக தோண்டப்பட்ட கிணறும் உடனடியாக மூடப்பட்டன.

 

கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளை மக்களிடம் காட்டியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதனால்தான் குழந்தை சுர்ஜித்தின் உடலை பொதுமக்களுக்கு காட்டவில்லை என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இறந்த உடலை மீட்பதற்கு மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படியே சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது என்றும் விளக்கம் கொடுத்தார்.


Leave a Reply