குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்ராஜ் வழக்குப்பதிவு

அனுமதி இல்லாமல் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் குழந்தையின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் ஆழ்துளைக்கிணறு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட நிகழ்வை ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்தியை பரப்பியதாக குற்றம் சாட்டினார். ஒரு உயிர் போன பிறகுதான் நாம் அனைவரும் பொறுப்புணர்வு பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் பேசுகிறோம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் பேனர் கீழே விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விஷயத்திலும் இதுதான் நடந்தது என்று வேதனை தெரிவித்தார்.

ஆழ்துளை கிணறுகள் குறித்து உச்சநீதிமன்றம் பல முன்னெச்சரிக்கை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் சிக்கி உயிர் இழப்பதை தடுப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளதாக குறிப்பிட்டனர். தொழில்நுட்பங்கள் வல்லுனர்கள் இருந்தும் சுர்ஜித்தை காப்பாற்ற முடியாது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் எத்தனை போர்வெல் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

அனுமதியில்லாமல் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் எத்தனை, அதன்மீது எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விவரங்களை தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Leave a Reply