சுர்ஜித் உயிரிழப்பு வேதனை தருவதாக தமிழிசை ட்விட்டர் பதிவு!

குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு மிகுந்த வேதனை தருவதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். சுர்ஜித் வில்சன் இறப்பு குறித்து தமிழிசை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குழந்தையின் இறப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்று கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

குழந்தையை மீட்க கடுமையான போராட்டங்கள் நடத்தி இருந்தாலும் உயிரோடு மீட்காதது மிகுந்த மனவருத்தத்தை தருவதாகவும் மீண்டு வரவேண்டும் என்ற பிரார்த்தனை பழிக்காமல் போய்விட்டது என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். இந்த மரணம் சாதாரணம் இல்லை என்றும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply