நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை பத்திரமாக திருப்பி அனுப்புமாறு பூமித்தாயிடம் மன்றாடுவதாக திரைப்பட நடிகை தீபா ஷங்கர் உருக்கமாக கூறியுள்ளார் .
குழந்தையை இதுவரை மீட்காதது வருத்தமளிப்பதாக நடிகர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இனி இவ்வாறு எந்த ஒரு குழந்தையும் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விடாதபடி கவனமாக பார்த்துக் கொள்ள உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூடி போர்க்கால அடிப்படையில் அரசும் தனிமனிதர்களும் முயற்சிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை சுஜித் சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல என பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார். முறையான பயிற்சியும் உபகரணங்களும் இருந்திருந்தால் நேரம் விரயமாகி இருக்காது என்றும் தெரிவித்தார் .
குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து 70 மணிநேரத்தை கடந்த நிலையில் குழந்தைக்கு என்ன ஆனது என நடிகர் மனோபாலா கேள்வியெழுப்பியுள்ளார். குழந்தை மேலும் ஆழத்திற்குச் செல்ல அருகில் பள்ளம் தோன்றியதே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.