“குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டுவர நான் பிரார்த்திக்கிறேன்” – பிரதமர் மோடி

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்து உள்ளார். 70 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் இந்த நிலையில் குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எந்த அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்து நமது தமிழக முதல்வரிடம் நரேந்திர மோடி அவர்கள் கேட்டறிந்து இருக்கிறார்.

மீட்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இடம் பிரதமர் மோடி கேட்டு அறிந்து கொண்டுள்ளார். ஆள் துளைகிணற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கக்கூடிய இரண்டரை வயது சிறுவன் சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

குழந்தையை பாதுகாப்பான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் ஒட்டுமொத்த தமிழகமும் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளனர்.


Leave a Reply