குழந்தையின் நிலையை அரசியலாக்க விரும்பவில்லை!

குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருப்பதைப் போலவே தானும் காத்திருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து தொலைக்காட்சி மூலம் தொடர்ந்து அறிந்து வருவதாக தெரிவித்தார்.

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகளில் உதவ ஒட்டுமொத்த நாடே தயாராக இருக்கிறது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply