நான்காவது நாளாக தொடரும் மீட்புப் பணி போராட்டம்!

நான்காவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது 61 மணி நேரத்தை கடந்து இந்த மீட்பு பணி நடைபெறுவதால் எப்படியாவது பாறைகளை குடைந்து பள்ளம் தோண்டி குழந்தையை நலமாக மீட்டு விட வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து துளையிடும் பணியானது நடைபெற்று வருகிறது.

 

தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தொடர்ந்து அதில் தோல்வி ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் இந்தப் பகுதி அமைந்துள்ள இடத்தில் 20 அடிக்கு கீழ் பாறைகள் தான் உள்ளது. கருங்கற்களால் உள்ளது. எனவே இந்த ராட்சத இயந்திரத்தின் பிளேடுகள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

நள்ளிரவில் ராமநாதபுரத்தில் இருந்து அதிநவீன இயந்திரம் கொண்டு வரப்பட்டது. நாற்பதடி பள்ளம் மட்டுமே அந்த இடத்தில் தோண்டப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் அந்த பகுதியில் பாறை அதிகளவில் உள்ளது. காலை சுமார் 5 மணி அளவில் அந்த இயந்திரத்தின் பிளேடுகள் சேதமடைந்தது அதனைத்தொடர்ந்து கொண்டுவரப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகளை தொடர்ந்து வருகின்றனர்.

 

பாதுகாப்பு படையினர் தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் துளையிடும் போது அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு அடிகள் மட்டுமே துளையிட முடிவதாக கூறுகின்றனர். அருகில் பாறைகளாக இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும் குழந்தையை எப்படியாவது மீண்டு கொண்டு வரவேண்டும் என்று மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.


Leave a Reply