“நேரம் ஆக ஆக கவலை அதிகரிக்கிறது”:ஜி.கே.வாசன்

புதிய இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணி நடைபெற உள்ளது. குழந்தை சுஜித்திற்கு ஏற்பட்ட விபத்தினால் தமிழகமே மிகுந்த வருத்தத்தில் உள்ளது வீட்டில் பணி வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழக அரசு மற்றும் மத்திய அரசினுடைய அனைத்து துறைகளும் மீட்பு துறையிலே அந்த பணியை முறையாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தொலைக்காட்சியின் மூலம் தெரிகிறது. இரவுபகலாக அதிகாரிகளும் ஊழியர்களும் பணியாளர்களும் தமிழக அமைச்சர்களும் கூட உடனிருந்து பணியை மேற்கொண்டு இருக்கின்றனர். குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் வீடு திரும்ப வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணம்.

அதேநேரத்தில் நேரம் ஆக ஆக கவலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகள் பணியாளர்கள் நம்பிக்கை அதுமட்டுமில்லாமல் தற்போது வந்திருக்கின்ற அதிக திறன் கொண்ட இயந்திரத்தின் மூலம் இந்த பணி வெற்றிகரமாக முடிவடையும் என நம்புகிறோம் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply