குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர பிரார்த்திக்கிறேன் – தமிமுன் அன்சாரி

குழந்தையை மீட்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுதலாக மாறி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் களத்தில் இருக்கக்கூடிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கூறியிருப்பதாவது அந்த குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து 52 மணி நேரங்களை கடந்து இருக்கக் கூடிய நிலையில் இன்னும் ஏன் அந்த குழந்தையை மீட்க வில்லை என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

 

ஆனால் நேரில் வந்து பார்வையிட்ட பிறகு இங்கு இருக்கக்கூடிய அமைப்பை கவனத்தில் கொண்டுதான் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை அறிந்துள்ளேன். இங்கு பாறைகள் சூழ்ந்துள்ளது. இதனால் வேகமாக இயந்திரங்களை பயன்படுத்தினால் அந்த அதிலே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக மாநில பேரிடர் குழுவும் தேசிய பேரிடர் குழுவும் மிகுந்த பொறுப்புணர்வோடு தங்கள் பணியை தொடர்ந்து வருகின்றனர்.

 

எனவே ஏன் தாமதம் என்று கேள்வியை இங்கு வந்து நேரில் பார்த்தால்தான் அனைவருக்கும் தெரியும் என்றும் ஓஎன்ஜிசி இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ஆறு மீட்டர் தூரம் வரை ஆழமாக சுழற்றி கொண்டுள்ளது. தற்போது தனியார் நிறுவனத்தில் என்எல்சி நிறுவனத்தில் இருந்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.


Leave a Reply