இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் மக்கள் அதிர்ச்சி!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க இயந்திரத்தின் முனை அடிக்கடி மலுங்கி விட்டதாக கூறுகின்றனர். இரண்டாவதாக இயந்திரம் வந்ததற்கு பிறகு அது வேகமாக பணியாற்றும் அதன் மூலமாக வேகமாக துளையிடும் பணி முடிந்து குழந்தையை காப்பதற்காக வீரர்கள் அக்குழிக்குள் சென்று காப்பாற்றுவார் என தமிழகமே நம்பி வந்த நிலையில் இரண்டாவது இயந்திரத்தின் உதிரிபாகங்களை பல்வேறு வாகனங்கள் மூலமாக கொண்டுவந்து அந்த வாகனங்களில் இருந்து உதிரிபாகங்கள் இணைக்கப்பட்டன.

 

இந்த பாகங்களை இணைப்பதை பெரும் சவாலான வேலையாக இருந்தது. இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது. மாலை 6 மணிக்கு வந்த இயந்திரத்தின் உதிரி பாகங்கள் இணைப்பதற்கு இரவு 12 மணி ஆகிவிட்டது. இரவு 12 மணிக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சென்ற சமயத்தில் இரண்டாவது இயந்திரம் தொடங்கியது.

இந்த இயந்திரம் வேகமாக தனது பணியை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது கடினமாக இருக்கிறது. எனவே இயற்கையை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு மீட்பு படையினர் தள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும் கருவியைக் கொண்டு பூமியை துளையிடும் முயற்சிக்கும் பொழுது அந்த கூர்மையான பற்கள் உடைந்து விடுகின்றன. ஒவ்வொரு முறையும் சேதமடைந்த பகுதிகளை சரி செய்துவிட்டு உடனுக்குடன் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.


Leave a Reply