சுர்ஜித் உயிரிழப்பு! அழுகிய நிலையில் சுர்ஜித்தின் உடல் மீட்பு!

குழந்தை உயிரிழந்ததாக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 80 மணி நேரம் கடந்து நடந்த மீட்புபணி தோல்வியில் முடிந்துள்ளது. உடல் சிதைந்து துர்நாற்றம் வர தொடங்கிவிட்டதாக ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

 

தேசிய பேரிடர் மீட்பு படையினர் தாங்கள் கொண்டுவந்த கருவிகளை கிணற்றுக்குள் செலுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க இன்னொருபக்கம் முயற்சி மேற்கொண்டுள்ளனர் .அதாவது கிணறுக்கு ஒரு மீட்டர் அருகிலேயே சுரங்கம் போன்ற குழிதோண்டி குழந்தையை எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

 

போர்வெல், ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அந்த இயந்திரத்தின் மூலமாக பாறைகள் உடைக்கப்பட்டு துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணி முடிவுற்று குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.

 

இதனையடுத்து ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சுஜித்தின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டது தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் குழுவைச் சேர்ந்தவர்கள் உடலை மீட்டுள்ளனர்.


Leave a Reply