சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு, குழி தோண்டும் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டம் அருகே நடுக்காட்டு பட்டியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் 2 வயது குழந்தை சுஜித்தை மிகும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓஎன்ஜிசிக்கு சொந்தமான ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தையை சுற்றி இருக்கக் கூடிய அந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் இரண்டு மீட்டர் தள்ளி ஒரு மீட்டர் அகலத்திற்கு 110 அடி ஆழத்திற்கு துளையிட்டு அதேபோன்று பக்கவாட்டிலும் ஒரு துளையிட்டு சுரங்கம் அமைத்து குழந்தை அதற்கான பணி திட்டமிடப்பட்டு உள்ளது.

 

பயிற்சி பெற்ற மூன்று தீயணைப்பு வீரர்கள் கண்ணதாசன், திலீப் குமார், மணிகண்டன் ஆகிய மூன்று பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று குழந்தையை பத்திரமாக மீட்பார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்காக துளையிடும் பணியை தற்போது ரிக் இயந்திரம் தொடங்கியுள்ளது. மதியம் ஒரு மணிக்கு மீட்பு பணிகள் முழுவதுமாக நாளாக நடைபெற்று முடியும் என்று நம்பப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் நம்பிக்கைகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர். குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

 

அதிலிருந்து இதுவரைக்கும் 37 மணி நேரமாகி தொடர்ந்து பல்வேறு கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இறுதி முயற்சியாக தற்போது ஓஎன்ஜிசி சொந்தமான இயந்திரம் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Leave a Reply