அடுத்த 4 நாட்களுக்கு மழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வானிலை மைய இயக்குனர் புவியரசன் தென்மேற்கு வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக கூறினார். இதன் தாக்கத்தால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வங்கக் கடலில் காற்றழுத்தம் காரணமாக மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக லட்சத்தீவு சுற்றுவட்டாரத்தில் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply