பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் திருப்பூர், திருமுருகன்பூண்டி,அணைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பி.பி.சி டீலரான ஏ.கே.ஆர் ஏஜென்சி பெட்ரோல் பங்க் சார்பில் தீபாவளியை முன்னிட்டு முதலாம் ஆண்டாக “பெட்ரோல் போடுங்க… பரிசை வெல்லுங்கோ” என்ற பெட்ரோல் பங்க் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கடந்த 2 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை பெட்ரோல் பங்கில் ரூ.200 க்கு பெட்ரோல் அடித்த வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களை குலுக்கள் முறையில் தேர்தெடுக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஏ.கே.ஆர் ஏஜென்சி பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு ஏ.கே.ஆர் ஏஜென்சி நிறுவனர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் வரவேற்றார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன திருப்பூர் கிளை விற்பனை பிரிவு நிர்வாக அதிகாரி ரோஷன் குரியன் ஜோஸ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஆண்களுக்கான முதல் பரிசாக பூண்டி, அம்மாபாளையம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த சிவகுமாருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள ஹீரோ ஸ்பிளண்டர் மோட்டார் சைக்கிளும், பெண்களுக்கான முதல் பரிசாக அவினாசியை சேர்ந்த நவீனாவுக்கு ரூ.67 மதிப்புள்ள ஹோண்டா பிளசர் ஸ்கூட்டரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவினாசி ராமானுஜம், பூண்டி கருப்புசாமி, அணைப்புதூர் சபரீஸ்வரன், தேவம்பாளையம் சர்மிளா, திருச்செங்கோடு அருணாதேவி ஆகியோருக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் வழங்கப்பட்டது. அதேபோல் 3 வது பரிசாக தங்கராஜ், பரமசிவம், அருண்மொழி, ரங்காதரன், கருணாகரன், பழனிச்சாமி, பன்னீர்செல்வி, ஆஷா, ஜாய்ஸ், மணிமொழி ஆகியோருக்கு மிக்சி வழங்கப்பட்டது.