பழைய பத்து பைசா கொடுத்தால் ஒரு டிசர்ட் – திண்டுக்கல்லில் அலைமோதும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சந்துகடை பகுதியில் உள்ள ஒரு கடையில் பழைய பத்து பைசா நாணயத்திற்கு டி-ஷர்ட் வழங்கப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது .

சந்து கடை பகுதியில் அமீன் என்பவர் கூகுள் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். உலகில் பழமையான நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில், பத்து பைசா நாணயம் கொண்டு வரும் முதல் 200 பேருக்கு டீசர்ட் வழங்கப்படும் என அமீன் விளம்பரம் செய்திருந்தார். இதனையடுத்து டீசர்ட் வாங்குவதற்கு 500-க்கும் மேற்பட்டோர் கடை முன் திரண்டனர். இதில் முதல் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு டீசட் வழங்கப்பட்டது.


Leave a Reply