கோவையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, துப்புரவு தொழிலாளர்கள் கழிவுகளை அகற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள கழிவு நீரை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளர்கள், அரசு அறிவுறுத்திய எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவுகளை அகற்றி வருகின்றனர். மேலும் வெறும் கையில் அவர்கள் கழிவுகளை அகற்றும் அவலமும் அரங்கேறியுள்ளது.
கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு கையுறைகள் கூட வழங்குவதில்லை என துப்புரவு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
ரூ.500 கோடி முதலீடு: CM முன்னிலையில் ஒப்பந்தம்..!
திருப்பூருக்கு அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு..!
அங்கன்வாடியில் சமைத்த உணவில் பல்லி..6 குழந்தைகளுக்கு ஒவ்வாமை..!
200 பேரின் குடும்பங்களுக்கு ஷாக் கொடுத்த சாம்சங் நிறுவனம்..!
கர்நாடகாவில் 144 தடை உத்தரவு..இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்..!
வெள்ளையன் மறைவு.. தூத்துக்குடி கடைகள் அடைப்பு..!