ஊடகங்கள் செயல்பாடு… அபிஜித் பானர்ஜியிடம் பிரதமர் மோடி ஜோக்

மத்திய அரசுக்கு எதிராக தாம் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன என்று தம்மிடம் பிரதமர் மோடி நகைச்சுவையுடன் கூறியதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றிருக்கும் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடியை அபிஷேக் பானர்ஜி டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அனைத்து தரப்பினருக்கும் அதிகாரமளித்தல் மீதான ஆர்வம் அபிஜித்திடம் அதிகமாக காணப்படுவதாகவும்,பல்வேறு துறைகள் குறித்து ஆரோக்கியமான மற்றும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

 

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித், பிரதமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்று பாராட்டினார். மேலும் மத்திய அரசுக்கு எதிராக தாம் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன என்று தம்மிடம் பிரதமர் மோடி நகைச்சுவையுடன் கூறியதாகவும் அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.


Leave a Reply