பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 3 மணி நேரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த தேர்வு நேரம் கடந்த 2017-18ம் கல்வியாண்டில் இருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளுக்குமான பொதுத் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படும் என்றும், மாணவர்களின் வசதிக்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.