மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் கற்றுக்கொள்ள வேண்டும் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.

 

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடி யிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனையின் தலைவர் ராஜா சபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை சோபனா ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, கற்ற கல்வி முழுமை பெற வாழ்க்கைக் கல்வியும் அவசியம் என்று குறிப்பிட்டார்


Leave a Reply