எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சி : இந்தியா பதிலடி -பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்களும் பயங்கரவாதிகள் 10 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவத்தளபதி கூறியுள்ளார். இதன் மூலம் காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க முயன்ற பாகிஸ்தானின் சதி முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதற்காக எல்லையில் திடீர் தாக்குதல்களை நடத்தி இராணுவத்தை திசைதிருப்பி மற்றொரு பகுதியில் இந்திய எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்மிட்டது. இந்த சதித்திட்டம் முன்கூட்டியே தெரியவந்ததால் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்தது.

நேற்று அதிகாலை திடீரென பாகிஸ்தான் ராணுவம் தாக்கிய நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் மூன்று முகாம்கள் அழிக்கப்பட்டு 10 பேர் வரை கொல்லப் பட்டதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

 

இதுதவிர 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.


Leave a Reply