கோவை எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால் வியாபாரிகள் பொதுமக்கள் நடக்கமுடியாமல் கடும் அவதி !!!

கனமழை காரணமாக கோவை எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால் வியாபாரிகள் பொதுமக்கள் நடக்கமுடியாமல் கடும் அவதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கோவை மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட் தமிழகத்தில் இருந்து அனைத்து மார்க்கெட்டுக்கு காய்கறிகள் இங்கிருந்து எடுத்து செல்வது வழக்கம். இங்கு 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் மார்க்கெட் முழுவதும் தண்ணீர் நிரம்பி கடைக்குள் கழிவுநீர் சென்றதால் 50 லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் சுற்றி இருக்கும் கழிவுநீர் அனைத்துமே எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதிக்குள் வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் காய்கறி மூட்டைகளை சுமந்து செல்ல கூடிய இடத்தில் இவ்வாறு கழிவுநீர் சேறும் சகதியுமாக இருப்பதால் தங்களால் வேலைகள் செய்ய முடியவில்லை என்றும்,தங்களுக்கு சொறி,சிரங்கு போன்ற நோய்கள் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர். இங்கு உள்ள 150க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. மின்சாரம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சரியான பராமரிப்பு இல்லாததால் எந்த சூழ்நிலையிலும் மின்சார தாக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலை நிலவி வருகிறது என்றும் அச்சத்துடன் கூறுகின்றனர்.

 

அடிப்படை வசதிகள் உடனடியாக செய்திட வேண்டும் என்றும் இங்கு உள்ள காய்கறி வகைகள் அனைத்தும் உணவுக்காக கோவை மருத்துவமனை மற்றும் மத்திய சிறைச்சாலை இ.எஸ்.ஐ போன்ற பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சுகாதாரமற்ற காய்கறிகளை அனுப்புவதில் சிரமம் உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறுவதற்கான நடவடிக்கையை கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply