திருவாடானையில் கண்காணிப்பு கேமிரா..! இளைஞா்களின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவாடானையில் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாக கண்காணிப்பு கேமிரா பொது மக்கள், இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியது காவல் துறை மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை உள்ளது. இது வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. திருவாடானையை சுற்றியுள்ள கிராம மக்கள் அணைவரும் தங்களது தேவைகளை திருவாடானைக்குதான் வரவேண்டியுள்ளது. மேலும் வணிக வளாக்கங்களும் அதிக அளவில் உள்ளது.


இந்நிலையில் திருவாடானை தெற்கு தெரு இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து தங்களது சொந்த செலவில் சூச்சனி திருவாடானை தெற்கு தெரு, சன்னதி தெருக்களில் நடக்கும் குற்றச் செயல்களை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சி திருவாடானை தாசில்தார் சேகர் தலைமையில் திருவாடானை காவல் துணைப் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் ரிப்பன் வெட்டி திறந்து கேமிராவை வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


Leave a Reply