திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரி நகை கடையில் கொள்ளையடித்த நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு கடந்த ஜனவரி மாதம் 470 சவரன் நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு 9 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கடையில் கொள்ளை எடுத்து கைதான திருவாரூர் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வங்கிக் கொள்ளையில் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதியானது. இதுதொடர்பாக கணேசன் என்பவரை 7 நாள் காவலில் எடுத்து திருச்சி மாவட்ட தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

 

அதில் கொள்ளையடிக்க சுவரில் துளை தேவையான பொருட்கள் முகமூடிகள் கையுறைகள் நகைகளை எடை போடும் இயந்திரம் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Leave a Reply