--- --:--:-- --

நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார்

7

இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்து விட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு அவர் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

 

ஒரு மதத்தினர் மற்றொரு மதத்துடன் சண்டையிடுவதும் ஒரு சாதியினர் மற்றொரு சாதியினருடன் சண்டையிடுவதும் அனைவரின் கேலிக்கும் ஆளாகி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி பதிலையே பிரதமர் மோடி குறியாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

 

நூறு நாள் வேலைத்திட்டத்தை குறை கூறிய மோடிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று ராகுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்தாவது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மத்திய அரசு கற்றுக்கொள்ளவேண்டும் என கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon