இராமநாதபுரத்தில் விபத்தை ஏற்படுத்தும்  விளம்பர பலகைகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க கடந்த 2017ம் ஆண்டு,  சென்னை உயர்நீதின்ற நீதிபதி எம். எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, தமிழகம் முழுவதும் சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்தது. இந்த உத்தரவுகள் இருந்தாலும் கூட சாலையோர பகுதிகளில் விளம்பர பலகை வைப்பது இன்னமும் அதிகரித்து வருகிறது.

 

இராமநாதபுரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் சுற்றிலும் எந்நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் நெரிசலான பகுதியாக உள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்ட விளம்பர பலகைகளும் இதுவரை பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது.

அதேபோல்   முருகன் கோயிலை கடக்கும் வழியில் மிக ஆபத்தான வளைவில்புதிதாக பல விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதிகளில் பயணிக்கும் வாகன ஒட்டிகளுக்கு கவனசிதறல் ஏற்பட்டு விபத்தில் சிக்குகின்றனர். அந்த இடத்தில் போக்குவரத்து காவல்துறையினர் சாா்பில் வைத்துள்ள கூண்டு, அதன் மேல் வைக்கப்பட்டுள்ளவிளம்பர பலகை    போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையிலும், வாகன ஒட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும், பாதசாரிகளுக்கு நடப்பதற்கு கூட வழியில்லாத வகையிலும் தான் இந்த விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பிலும் எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. அதே போல் ஒரு விளம்பர பலகை வைப்பதற்கு எழு நாட்கள் மட்டுமே அனுமதியுள்ளது . ஆனால் சிலர் மாதக்கணக்கில் அங்கு விளம்பர பலகைகளை வைக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.  அதுமட்டுமல்ல அதே இடத்தில் நிரந்தரமாக வேற வேற விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. இதனை தடுத்து வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்கவும் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Leave a Reply