--- --:--:-- --

மேட்டூர் அணை 3-வது முறையாக நீர்வரத்து அதிகரிப்பு

ef

கர்நாடகாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது இதனால் மேட்டூர் அணை இந்தாண்டு 3-வது முறையாக ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

கர்நாடகாவில் தென் மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்ட அளவுக்கதிகமான நீரால் கடந்த ஆகஸ்ட் மாதமும், செப்டம்பர் மாதமும் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது.டெல்டா பாசனத்திற்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது.

 

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே கர்நாடகத்திலும், காவிரி நீர்ப்ப்பிடிப்பு பகுதியிலும் கனமழை கொட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 16225 கன அடியும், கபினி அணையிலிருந்து 500 கன அடியும் திறக்கப்பட்டு, காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 33 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால்மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம் | 114.83 அடியாக அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசன பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளதால் நீர்த் தேவை குறைந்துள்ளது. இதனால் பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவும் 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடக அணைகளில் இருந்து நீர்த் திறப்பு அதிகரித்துள்ளதாலும், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து டெல்டா பகுதிகளிலும் மழை கொட்டி வருவதால் பாசனத்திற்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாலும் மேட்டூர் அணை இந்தாண்டு 3-வது முறையாக ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon