முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

ஜெயலலிதாவின் சாவிற்கு காரணம் எனக்கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் வழக்கு தொடரப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். விக்ரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் ஆதரித்து மு க ஸ்டாலின் ஏழு செம்பொன் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கெடுபிடி ஆட்சியாக அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.

 

ஜெயலலிதாவின் மரணத்திற்கு தான் தான் காரணம் என கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் மீது வழக்கு தொடுத்த நிரூபிக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிந்து அதிமுக தொண்டர்களுக்கு தெரிவிப்பேன் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.


Leave a Reply