பெரம்பலூர் அருகே மான் வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான மான்கள் உள்ளன. அங்கு சிலர் நாயை கொண்டு மானை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் மானை வேட்டையாடி எடுத்து சென்றுள்ளனர் அப்போது வனத்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுடன் மேலும் நான்குபேரும் ஆணை வேட்டையாடியது தெரிய வந்தது. தற்போது தலைமறைவாக உள்ள 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






