பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சிபிஐ விசாரணை கண்காணிக்கப்படும்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கின்றன என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும் எனவும் இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை வழங்க குழு அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் தங்களது விசாரணையை தொடங்கியது அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கில் இடைக்கால குற்றப்பத்திரிகை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. எனவே இந்த வழக்கு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதைக்கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளிவைத்தனர்.


Leave a Reply