திருவாடானை தாலுகாவில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா
திருவாடானை தாலுகா ஆர்எஸ் மங்கலம் தாலுகா பகுதி மக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மற்றும் ஆர்எஸ் மங்கலம் தாலுகாவில் உள்ள கிராம மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவானது ஆர்எஸ் மங்கலம் பகுதியில் தனியார் மகாலில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் முன்னிலையில் நடைபெற்றது. திருவாடானை, ஆர்எஸ்மங்கலம் பகுதி மக்களுக்கு தாலிக்கு தங்கம் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் பயன் அடைந்தனர். அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




