பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி !!!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி பிஷப் அப்பாசாமி கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.பிஷப் அப்பாசாமி கலை,அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூடைப்பந்து போட்டியில் கோவை, ஈரோடு, ஊட்டி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சுமார் 150 பேர் போட்டியில் கலந்துகொண்டனர்.இந்த போட்டியில் இன்று இறுதிகட்ட கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.

இதில் கோவை பி.எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரி முதல் பரிசும்,  இரண்டாவது பரிசை கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரி, மூன்றாவது பரிசை நிர்மலா கலை அறிவியல் கல்லூரி,  நான்காவது பரிசாக ஈரோடு வெள்ளாளர் கலை அறிவியல் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் யுனிவர்சிட்டி உளவியல் துறை இயக்குனர் ராஜேஷ்வரன், ஆசாமி கல்லூரியின் செயலாளர் மிருணாலினி டேவிட், கல்லூரி முதல்வர் ஜெமீமா வில்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


Leave a Reply