பள்ளிக்கல்வித்துறையில் உள்ள 8462 பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1590 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள இந்த தற்காலிக பணியிடங்களுக்கு காலநீட்டிப்புக் அரசாணை வெளியான பணியிடங்களில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்கப்படும்.